‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் ரீஎன்ட்ரி கொடுக்கும் புகழ் – உற்சாகத்தில் போட்டியாளர்கள்!

0
'குக் வித் கோமாளி' சீசன் 3ல் ரீஎன்ட்ரி கொடுக்கும் புகழ் - உற்சாகத்தில் போட்டியாளர்கள்!
'குக் வித் கோமாளி' சீசன் 3ல் ரீஎன்ட்ரி கொடுக்கும் புகழ் - உற்சாகத்தில் போட்டியாளர்கள்!
‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் ரீஎன்ட்ரி கொடுக்கும் புகழ் – உற்சாகத்தில் போட்டியாளர்கள்!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த முறை ஆரம்பத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட கோமாளி புகழ் இல்லை என்பது வருத்தமளித்தது. ஆனால் தற்போது பார்வையாளர்களை மகிழ்ச்சியாக்கும் வகையில் ஒரு புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளின் வரிசையில் முன்னனியில் உள்ளது. முன்னதாக 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பிக் பாஸ் புகழ் வனிதா தான் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். அதன் பின்னர் முதல் சீசனிற்கு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பின் காரணமாக அடுத்த சீசன் தொடங்கப்பட்டது. 2 வது சீசனில் கனி,அஸ்வின், பாபா பாஸ்கர் மாஸ்டர், நடிகை சகிலா போன்றவர்கள் குக்குகளாக கலந்து கொண்டனர்.

விஜய் டிவி “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகிய புலி – மனம் உருகி சொன்ன விளக்கம்!

2சீசன்களாக தொடர்ந்து கோமாளிகள் மக்களை குஷிப்படுத்தி வந்துள்ளனர். ஷிவாங்கி, பாலா, தங்கதுரை,சக்தி போன்றவர்கள் முதல் சீசனிலிருந்து கோமாளிகளாக இருந்து தற்போது வரை கோமாளிகளாக இருக்கிறார்கள். சமீபத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில், மனோ பாலா, சந்தோஷ், வித்யூ லேகா, ஸ்ருதிகா போன்றவர்கள் குக்குகளாக களம் இறங்கியுள்ளனர்.

ஜீ தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – அதுவும் இந்த சீரியலில்? ரசிகர்கள் உற்சாகம்!

கோமாளியாக முன்னர் இருந்தவர்களுடன் சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன் போன்றவர்கள் வந்துள்ளனர். ஆனால் புகழ் இந்த சீசனில் அதிக சினிமா வாய்ப்புகள் கிடைத்து பிசியாக இருப்பதால் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையாக இந்த வார இறுதியில் வரும் எபிசோடில் புகழ் வருகிறார். அவரை அனைவரும் மகிழ்ச்சியாக வரவேற்று கலாய்ப்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!