விஜய் டிவி “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகிய புலி – மனம் உருகி சொன்ன விளக்கம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "காற்றுக்கென்ன வேலி" சீரியலில் இருந்து விலகிய புலி - மனம் உருகி சொன்ன விளக்கம்!
விஜய் டிவி “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகிய புலி – மனம் உருகி சொன்ன விளக்கம்!

விஜய் டிவி “கனா காணும் காலங்கள்” சீரியலில் புலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ராகவேந்திரன். அவர் தற்போது “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் நடித்து வரும் நிலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் மீடியா துறையை விட்டு விலக இருப்பதாக வருத்தத்துடன் சொல்லி இருக்கிறார்.

நடிகர் ராகவேந்திரன் புலி:

தமிழ் சின்னத்திரை நடிகர்கள் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தாலும் காலப்போக்கில் அவர்களுக்கு வரும் வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமான சீரியலான “கனா காணும் காலங்கள்” சீரியலில் புலி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ராகவேந்திரன் புலி. அந்த சீரியலுக்கு பின் அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே வந்தது. சீரியலில் ஒரு சில காப்பாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டாலும் அது கதை உடன் சேராமல் தான் இருந்தது.

தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!

இந்நிலையில் அவர் தற்போது விஜய் டிவி “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் ஹீரோ மாற்றப்பட்ட நிலையில், தற்போது அந்த சீரியலில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவேந்திரனும் விலகியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் 15 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். தொடக்கத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்தேன். ஆனால் இப்போ வரைக்கும் அப்படியேத்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். யாரும் வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை. அதற்காக நானும் ஜால்ரா அடிக்க தயாராக இல்லை. இதுவும் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம். இன்னமும் அப்பா அம்மாவை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

TCS நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

நான் 15 நாட்கள் ஷூட்டிங் போனால் 2 அல்லது 3 நாட்கள் தான் சீனில் காண்பிக்கிறார்கள். அதுவும் சில நேரங்களில் செட் பொருளாக இருந்திருக்கிறேன். சீரியலுக்கு கூப்பிடும் போது நீங்க தான் எல்லாம் என்று சொல்வார்கள். ஆனால் போக போக நம்ம கேரக்டர் என்ன ஆகும் என்று நமக்கே தெரியும். 2 மாதத்திற்கு முன்பு ஒரு மாத சம்பளம் ரூ.6000 வாங்கினேன். யோசித்து பாருங்கள் அதை வைத்து எப்படி என் குடும்பத்தை நடத்துவது. பின் ஒரு நாளைக்கு 3500 ரூபாய் தான் என்னுடைய சம்பளம். பிச்சைக்காரன் கூட என்னைவிட அதிகமாக சம்பாதிப்பான் என மனம் உருகி அவர் பேசி இருக்கிறார். அதனால் இனிமேல் மீடியா வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here