TCS நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!
தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2020 அல்லது 2021 இல் BE / BTech, ME / MTech, MCA, MSc தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. இதற்கான முக்கிய விவரங்கள் அனைத்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
TCS வேலைவாய்ப்பு:
தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களை அதிக அளவில் பணி நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 2020 அல்லது 2021 இல் BE / BTech, ME / MTech (MTech), MCA, MSc தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை சேவைகள் ஆகிய இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது. இந்த பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tcs.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தற்போது, ஆஃப்-கேம்பஸ் டிரைவ் 2020 மற்றும் 2021 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே. நடத்தப்படுகிறது. ஆனால் விரைவில் 2019 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் நடத்தப்படும். கேம்பஸ் டிரைவின் TCS க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தகுதிக்கான அளவுகோல் மற்றும் தேர்வு செயல்முறை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுகலை முடித்திருக்க வேண்டும். 2020 அல்லது 2021ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். முன்னதாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்க்கு மாணவர்கள் இளங்கலை பொறியியல் (BE), – இளங்கலை தொழில்நுட்பம் (BTech), – முதுகலை பொறியியல் (ME), – முதுகலை தொழில்நுட்பம் (MTech), முதுகலை கணினி பயன்பாடுகள் (MCA), – முதுகலை அறிவியல் (MSc) பட்டங்களை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம்:
- டிசிஎஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் கேரியர்ஸ் பக்கத்திற்குச் சென்று, ஆஃப் கேம்பஸ் டிரைவில் கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் ‘IT’ அல்லது BPM வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் கல்வி விவரங்களை பூர்த்தி செய்து உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றவேண்டும்.
- பின்னர் Final Submit என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் விண்ணப்ப செயல்முறை முடிந்தது.
தேர்வு முறை:
விண்ணப்பதார்கள் தேர்வு மொத்தம் இரண்டு சுற்றுகளாக நடைபெறும். எழுத்துத் தேர்வு முதல் சுற்றில் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 2வது சுற்றில் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும்.