ஜீ தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – அதுவும் இந்த சீரியலில்? ரசிகர்கள் உற்சாகம்!

0
ஜீ தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் - அதுவும் இந்த சீரியலில்? ரசிகர்கள் உற்சாகம்!
ஜீ தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் - அதுவும் இந்த சீரியலில்? ரசிகர்கள் உற்சாகம்!
ஜீ தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – அதுவும் இந்த சீரியலில்? ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கி பல சர்ச்சைகளில் சிக்கிய சர்ச்சை நாயகி வனிதா அவர்களின் தந்தை விஜயகுமார் மீண்டும் ஜீ தமிழ் சீரியல் ஒன்றில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். இது குறித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயகுமார்:

தமிழ் சின்னத்திரையில் 80’ஸ் காலங்களில் பல படங்களில் கதாநாயகனாக கலக்கி வந்த நடிகர் விஜயகுமார், வயதான பின் சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சன் டிவியில் தங்கம், வம்சம், நந்தினி பல ஹிட் சீரியலில் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அதன் பின் அவரை சின்னத்திரையில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அவரது மூத்த மகள் வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விஜய் டிவி ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர் முன்னா – ரசிகர்கள் உற்சாகம்!

அதன் மூலமாக அவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். வாய்யை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் பல இடங்களில் தேவை இல்லாமல் பேசி வத்திக் குச்சி வனிதா என பட்ட பெயர் வைக்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சியில் அவரது பங்களிப்பு இருந்தது. அதன் பின் அவரது நான்காவது திருமணம் மூலம் ஏகப்பட்ட சர்ச்சைகள் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது, வனிதாவை தன்னுடைய மகளே இல்லை என சொல்லும் அளவிற்கு விஜயகுமார் வெறுப்பில் இருக்கிறார்.

‘செம்பருத்தி’ ஷபானாவுடன் ஆன திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஆர்யன் – ரசிகர்களுக்கு அளித்த பதில்!

இந்நிலையில் தற்போது விஜயகுமார் புதிய சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது அவர் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடி தற்போது இரண்டாம் பாகம் வந்துள்ள “ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி” சீரியலில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்க இருக்கிறார். இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. தற்போது வனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். தினமும் பிரச்சனை பிரச்சனை என இருப்பதால் இந்த வாரம் அவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!