‘செம்பருத்தி’ ஷபானாவுடன் ஆன திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஆர்யன் – ரசிகர்களுக்கு அளித்த பதில்!

0
'செம்பருத்தி' ஷபானாவுடன் ஆன திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஆர்யன் - ரசிகர்களுக்கு அளித்த பதில்!
'செம்பருத்தி' ஷபானாவுடன் ஆன திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஆர்யன் - ரசிகர்களுக்கு அளித்த பதில்!
‘செம்பருத்தி’ ஷபானாவுடன் ஆன திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஆர்யன் – ரசிகர்களுக்கு அளித்த பதில்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் குடும்பத்தின் மூத்த மகனாக செழியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஆர்யன், தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்திருக்கும் பதிவுகள் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி ஆர்யன்

தமிழ் சின்னத்திரை தொடர்களில், குடும்பப்பாங்கான கதைக்களம் கொண்ட ‘பாக்கியலட்சுமி’ சீரியல் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது. இந்த சீரியல் பாக்கியா என்ற இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்தாலும், மற்ற ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மூத்த மகனாக, அப்பா கோபியை போல வேலை, பணம் என்று எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் செழியன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ஆர்யன்.

‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் காஃபிக்காக சண்டை போடும் வனிதா – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

விஜய் டிவியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகர் ஆர்யன் கடந்த 2 ஆண்டுகளாக ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வருகிறார். இதற்கிடையில், பிரபல சீரியல் நடிகை ஷபானாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்ளுடன் கேள்வி, பதில் உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

அதில் ஷபானா சம்பந்தப்பட்ட பல கேள்விகளை ரசிகர்கள் கேட்க, அவை அனைத்திற்கும் உற்சாகமாக பதிலளித்திருக்கிறார் நடிகர் ஆர்யன். ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஆர்வம் இல்லாத நடிகர் ஆர்யன் தற்போது இந்த கேள்வி, பதில் உரையாடலை மேற்கொண்டிருக்கும் நிலையில், ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா நடிகை நேஹா இது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார். அப்போது 2022ல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கேப்டன் கூல் MS தோனி – கிராபிக் நாவல்! ரசிகர்கள் உற்சாகம்!

தொடர்ந்து நடிகை ஷபானாவுடனான திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்ட ஆர்யன், ஷபானா எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தனக்கு சமைத்து கொடுத்து விட்டு தான் ஷூட்டிங் செல்வதாக கூறியுள்ளார். மேலும், நீங்கள் யாரையாவது பார்த்து பொறாமை பட்டதுண்டா என்று ரசிகர் ஒருவர் கேட்க, என்னுடைய வேலையை பார்ப்பதற்கே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதில் எங்கே மற்றவர்களை பார்த்து பொறாமைப்பட முடியும் என்று நடிகர் விஐய் சேதுபதியின் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார் நடிகர் ஆர்யன். இந்த பதிவுகள் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here