விஜய் டிவி ‘குக் வித் கோமாளி 3’ புகழ் செய்த காரியம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி 3' புகழ் செய்த காரியம் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி 3' புகழ் செய்த காரியம் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி 3’ புகழ் செய்த காரியம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் வரும் வாரத்திற்கான எபிசோடுகள் குறித்த ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், புகழ் செய்யும் சேட்டைகள் அதிக அளவில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி 3:

விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அதிக ரசிகர்கள் இருந்த போதிலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் இருந்து தான் வருகின்றனர். இதனால் தொடர்ந்து 3 வது சீசன் தொடங்க அதிக ஆர்வம் மக்கள் மத்தியில் இருந்தது. இந்த முறையும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவது குறித்த பல தகவல்கள் வந்த போதிலும், அதில் ஒரு சில தகவல்கள் மட்டுமே உண்மையாக இருந்தது. முதல் வாரத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புகழ் வரவில்லை என்பது வருத்தத்தை அளித்தது.

முதல் நாள் ஸ்கூலுக்கு போன “ராஜா ராணி 2” ஆல்யாவின் மகள் அய்லா – ட்ரெண்டான வீடியோ!

ஆனால் அடுத்த வாரத்தில் இருந்து புகழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வழக்கம் போல் மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சி முழுவதும் காமெடி செய்து வந்தார். இதனால் புகழ் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில், வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாக தொடங்கியுள்ளது. அதன்படி முதல் ப்ரோமோவில் ஆடலும் பாடலும் என்ற டாஸ்க் பெயர் கூற, கோமாளிகள் பாடலை கேட்டுக் கொண்டும், குக்குகள் ஆடிக் கொண்டும் சமைக்க வேண்டும்.

முதல் நாள் ஸ்கூலுக்கு போன “ராஜா ராணி 2” ஆல்யாவின் மகள் அய்லா – ட்ரெண்டான வீடியோ!

தற்போது வெளியான 2ம் ப்ரோமோவில், பேன் கேக்குகளை விதவிதமாக செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், புகழ் நடுவர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் விதமாக பேமிலி என்றும், பேன்ஸ் என்றும் பேன் கேக்குகளை செய்து கொண்டு வந்து அசத்தியுள்ளார். பேமிலி என்று இருந்ததை பார்த்து விட்டு நடுவர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விட்டனர். இதனால் வரும் வாரத்தின் எபிசோட் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!