சர்ச்சையை கிளப்பிய பிரபல சீரியலின் திருமண காட்சிகள் – இயக்குனர் சொன்ன விளக்கம்!
சன் டிவியில் வெற்றி சீரியல்கள் பல இயக்கிய திருச்செல்வம் தற்போது “எதிர் நீச்சல்” என்ற சீரியலை இயக்கி வருகிறார். இந்நிலையில் அந்த சீரியலில் கடந்த வாரம் ஒளிபரப்பான காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. அது குறித்து இயக்குனரின் கருத்து என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இயக்குனர் திருசெல்வம்:
நடிகை தேவயானி நடிப்பில் சன் டிவியில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த சீரியல் தான் “கோலங்கள்”. அதன் பின் இவர் மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி போன்ற சீரியல்களை இயக்கி இருக்கிறார். ஆனால் அந்த அளவிற்கு சீரியல்கள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் சன் டிவியில் “எதிர் நீச்சல்” என்ற சீரியலை இயக்கி வருகிறார். பெண்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் நிலையில், முன்னணி இயக்குனரின் சீரியல் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.
கோபிக்கு எதிராக மாறும் பாக்கியா – சீரியலில் இனி வரும் எபிசோடுகள்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஆனால் சீரியல் தொடங்கப்பட்டு ஒரு சில எபிசோடுகள் சென்ற பின்னர் கூட சொல்லும் அளவிற்கு வரவேற்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் திருமணம் குறித்த காட்சிகள் எடுக்கப்பட்டது. அதில் ஒருவர் திருமணத்தில் மணப்பெண் நடனம் ஆடியதற்கு விமர்சனம் செய்தார். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் அதை இப்படி ஆட்டம் போட்டு கெடுக்காதீங்க என சொல்ல, இது தான் ட்ரெண்ட் என மணப்பெண் தோழி சொல்கிறார். அதெல்லாம் இங்கே வேண்டாம் யார் வீட்டு கல்யாணம் என தெரியுமா என கேட்க, அவர்கள் எதுவும் பேசாமல் இருக்கின்றனர்.
மணிமேகலையை கலாய்த்து தள்ளிய ‘குக் வித் கோமாளி’ குழுவினர் – வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்!
தொடர்ந்து அவர் போட்டோகிராபரை அழைத்து தாலிகட்டுவதற்கு முன்னாடியே நெருக்கமாக போட்டோ எடுக்குறீங்க இதற்கு ட்ரெண்ட் என சொல்ல, அவர் போட்டோ எடுபவர்களை திட்டுகிறார். அதனால் திருச்செல்வத்துக்கும் போன் அதிகமாக வந்ததாம், அதில் வீடியோகிராபர்களும் போட்டோகிராபி எடுக்குறவங்களும் கொந்தளித்து இருக்கின்றனர். அதற்கு திருச்செல்வம், அது ஒரு பிற்போக்குத்தனமான கேரக்டரின் கருத்து. அந்தக் கேரக்டர் அப்படித்தானே பேசும். நான் எதுக்குங்க வீடியோகிராபர்களைத் திட்டப் போறேன் என்று சொல்லி இருக்கிறார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்