காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு இன்று விடுவிப்பு!
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் சில நிர்வாகிகளின் கணக்குகளும் முடக்கப்பட்ட நிலையில் இன்று அவை விடுவிக்கப்பட்டன.
ட்விட்டர் கணக்குகள்:
டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சிறுமியின் பெற்றோரை சந்தித்தார். அது குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
சுதந்திர தினவிழா: முதல்வரின் சிறப்பு பதக்க விருதுகள் – 33 பேர் தேர்வு!
போக்சோ சட்டப்படி, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், அந்த சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதோ அல்லது நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ சட்டப்படி குற்றமாகும். இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன்படி, ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சிறுமியின் தாயுடன் பேசியது தொடர்பான புகைப்படத்தையும் நீக்கினார். இருந்த போதிலும் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை ட்வி்ட்டர் நிறுவனம் முடக்கி நடவடிக்கை எடுத்தது. ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், டுவிட்டர் நிறுவனம் பாரபட்சமாக செயல்படுவதுடன், நாட்டின் அரசியல் நடவடிக்கையிலும் தலையிடுகிறது என குற்றம் சாட்டினார். இந்நிலையில், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு இன்று விடுவிக்கப்பட்டு உள்ளது.