தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் – கலெக்டர் வேண்டுகோள்!

0
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் - கலெக்டர் வேண்டுகோள்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் - கலெக்டர் வேண்டுகோள்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் – கலெக்டர் வேண்டுகோள்!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 75% மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அதனால் அனைத்து மக்களும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அம்மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசி கட்டாயம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Vijay TV Big Boss Promo || சாப்பிடாமல் அடம் பிடித்த ராஜு, சமாதானம் செய்த பாவ்னி – நெகிழ்ச்சியான கிளிப்ஸ்!!

ஆனாலும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்துவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 75% மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அதனால் இம்மாதம் 11ம் தேதிக்குள் முதல் தவணை போடாத அனைவரும் அவசியம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி பாஸ் கட்டாயம் – அரசு அதிரடி அறிவிப்பு!!

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மற்றவர்களுக்கு தொற்று பரப்பும் வகையில் பொது இடங்களுக்கு அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பொது இடங்களுக்கு செல்லும் போது தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களை கையிலோ அல்லது போனிலோ வைத்திருக்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விசாரணைகள் மற்றும் விவரங்களுக்கு 9498746781, 9345333899 என்ற செல்போன் எண்களை தொடர்புகொள்ளலாம் என்று அம்மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here