இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பட்டியல்
TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்
பொருளியல் பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா (Comptroller and Auditor General (CAG) of India) இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் (Chapter V) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். அவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.
இந்தியாவின் 13வது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான ராஜீவ் மெகரிஷி 2017 இல் பதவியேற்றார்.
போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கான இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பட்டியல்
எண். | இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் | பதவிக்காலம் |
---|---|---|
1 | வி. நரஹரி ராவ் | 1949 - 1954 |
2 | ஏ. கே. சந்தா | 1954 - 1960 |
3 | ஏ. கே. ராய் | 1960 - 1966 |
4 | எஸ். ரங்கநாதன் | 1966 - 1972 |
5 | ஏ. பாக்சி | 1972 - 1978 |
6 | ஜியான் பிரகாஷ் | 1978 - 1984 |
7 | டி. என். சதுர்வேதி | 1984 -1990 |
8 | சி. ஜி. சோமையா | 1990 - 1996 |
9 | வி. கே. ஷுங்லு | 1996 -2002 |
10 | வி. என். கௌல் | 2002 - 2008 |
11 | வினோத் ராய் | 2008 - 2013 |
12 | சசி கன்ட் ஷர்மா | 2013 - 2017 |
13 | ராஜீவ் மெகரிஷி | 2017 - இன்று வரை |