‘நாம் இருவர் நமக்கு இருவர்’ முதல் ‘ரோஜா’ வரை – ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

0
'நாம் இருவர் நமக்கு இருவர்' முதல் 'ரோஜா' வரை - ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
'நாம் இருவர் நமக்கு இருவர்' முதல் 'ரோஜா' வரை - ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ முதல் ‘ரோஜா’ வரை – ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இந்த நாளுக்கான ப்ரோமோ மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ள சில சீரியல்கள் மற்றும் அதன் ப்ரோமோ மீதான டாப் கமெண்டுகளை குறித்து இப்பதிவில் காணலாம்.

சீரியல் ப்ரோமோ

தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நூற்றுக்கணக்கான சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்தது ஒரு சில சீரியல்களாக தான் இருக்கும். அந்த வகையில் சின்னத்திரை தொடர்கள் மூலம் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ள விஜய், ஜீ தமிழ், சன் போன்ற சேனல்களின் சீரியல்கள் எப்போதும் TRP ரேட்டிங்கில் முதலிடங்களை வகித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் சில இந்த நாளுக்கான முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இயக்குனரின் படைப்பில் புதிய சீரியல் – ப்ரஜன் & சரண்யா துராடி ஜோடி!

அப்படி இன்றைய நாளுக்கான ப்ரோமோ மூலம் அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்துள்ள சீரியல்கள் மீதான ரசிகர்களின் கருத்துக்கள் குறித்து இப்பதிவில் விரிவாக காணலாம். அந்த வகையில் முதலாவதாக ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் ப்ரோமோவுக்கு மாயன் VS மாறன் சூப்பர், மாயனை இப்படி பார்த்து எத்தனை நாள் ஆச்சு, அண்ணன் தம்பி என்றால் எதிர் எதிராக தான் இருக்க வேண்டுமா, ‘ உனக்கு அண்ணன் டா நானு’ மாயனின் மாஸ் டயலாக், மாயன் என்றால் கெத்து தான் என கமென்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்.

அடுத்ததாக ‘ரோஜா’ சீரியல் ப்ரோமோவுக்கு பேய் வருது பேய் வருது என்ற அஷ்வினின் கலாய் சூப்பர், இன்னும் ஆயிரம் எபிசோடுகள் வந்தாலும் செண்பகம் அம்மாவுக்கு பழைய ஞாபகம் வராது, ‘கோகுலத்தில் சீதை’ நடிகர் ‘ரோஜா’வுக்கு வந்ததால் தான் அந்த சீரியலில் அவர் ஜெயிலில் இருக்கிறார் போல, இப்படியே போனா என்ன அர்த்தம் உண்மை வெளியே வர வேண்டாமா என விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். தொடர்ந்து விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு கோபி சார் உங்க ஜோலி முடிஞ்சிது.

மாமனார் என்றால் ராமமூர்த்தி போல இருக்க வேண்டும், தாத்தாவோட அதிரடி ஆக்ஷன் தெறிக்க விடுது, என்ன இப்படி சட்டுனு கோபிய மாட்டி விட்டீங்க, என்ன கோபி ராதிகா பேர கேட்டாலே உதறுதில்ல, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது தாத்தாவின் நடிப்பு, ரீல் அந்து போச்சு கோபி என கோபி கதாப்பாத்திரத்தை பங்கமாக கலாய்த்துள்ளனர். அடுத்ததாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ப்ரோமோவுக்கு மீனா நடிப்பு சூப்பர், கதை இப்படியே ஜாலியா இருந்தா நல்லா இருக்கும் என பதிவிட்டுள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், செம்பருத்தி நடிகையுடன் காதல் – அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி!

மேலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ப்ரோமோவுக்கு பரவாயில்ல பாரதி இப்போவாவது நடிக்கிறியே,ஹேமா உன் பொண்ணு தான் சீக்கிரமா DNA டெஸ்ட் எடுப்பா பாரதி, பாரதி – கல்லுக்குள் ஈரம், கண்ணம்மாவுக்கு இதுவே பெரிய வெற்றிதான், பாரதியை பார்த்தால் பாவமா இருக்கு என கமெண்ட் செய்துள்ளனர். தொடர்ந்து ‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு இப்படி சந்தோஷமா இருக்காதீங்க பின்னாடியே பெரிய பிரச்சனை வரும் என பதிவிட்டுள்ளனர். இந்த கமெண்டுகளை வைத்து பார்க்கும் போது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் மாயன், மாறன் இருவரின் எதிரும் புதிருமான கதைக்களத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதாக தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!