கண்ணனை வெறுக்கும் மூர்த்தி, போரடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் – புலம்பும் ரசிகர்கள்!

2
கண்ணனை வெறுக்கும் மூர்த்தி, போரடிக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் - புலம்பும் ரசிகர்கள்!
கண்ணனை வெறுக்கும் மூர்த்தி, போரடிக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் - புலம்பும் ரசிகர்கள்!
கண்ணனை வெறுக்கும் மூர்த்தி, போரடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் – புலம்பும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் கண்ணனை வெறுத்து ஒதுக்கும் மூர்த்தி குடும்பத்தினர், எப்படியாவது கண்ணனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்த்து சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ல் சில முக்கியமான காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது கடந்த ஒரு வாரமாக லட்சுமி அம்மாவின் இறப்பு, இறுதி சடங்கு காரியங்கள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. குறிப்பாக அந்த காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக நடப்பது போல படம் பிடிக்கப்பட்டுள்ளது. தவிர ஒரு உண்மையில் நடந்த ஒரு இறப்பு சம்பவத்தை பிரதிபலிப்பது போல ஒவ்வொரு காட்சிகளும் அமைந்திருந்தது. அதே போல அந்த காட்சிகளில் நடித்திருந்த ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் நடிப்பும் ரசிகர்களிடம் வெகுவான பாராட்டை பெற்றிருந்தது.

தனது மகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா வெளியிட்ட வீடியோ – மகள்கள் தினம் வாழ்த்து!

இந்த எபிசோடுகள் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் TRP ரேட்டிங் எக்கச்சக்கமாக உயர்ந்தது. இதையடுத்து கடைசி 2 அல்லது 2 எபிசோடுகளில் ஒளிபரப்பாகி வரும் சில காட்சிகள் ரசிகர்களுடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பாசத்துக்கும், அன்பிற்கும் பெயர் போன மூர்த்தி, கண்ணனை வெறுத்து ஒதுக்குவதாக வெளியான எபிசோடுகள் ரசிகர்களிடையே சில கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர் 8’ டைட்டில் வின்னராக 10 லட்சத்தை தட்டிச் சென்ற ஸ்ரீதர் சேனா – டாப் 3 யார்?

அம்மாவின் முகத்தை பார்க்க முடியாத கண்ணன் ஆதங்கத்தில் வந்து பேச அதை மதிக்காத மூர்த்தி, அஸ்தியை கரைப்பது, சாப்பிடும் போது என பல இடங்களில் கண்ணனை வெறுப்பது போல காட்சிகள் ஒளிபரப்பானது. இதற்கு மூர்த்தியும், கதிர், ஜீவாவிடம் விளக்கம் கொடுத்திருந்தார். என்றாலும் அம்மா இறந்த போது கூட கண்ணனுக்கு ஆறுதல் சொல்ல மூர்த்தி தயங்கியவாறு ஒளிபரப்பான இந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது. இது தவிர மக்கள் மத்தியில் கண்ணனுக்கு மிகப்பெரிய ஆதரவுகள் கிடைத்திருக்கும் இந்த சூழலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்கள், கண்ணனை சீக்கிரமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Don’t write your own comments in the name of others. Still Murphy is one only right remaining kannan and especially ishwarya and those who try to love kannan is worst examples of society. That ishwarya character still not accepted this is totally her pressure and mistake. It’s very boring seri

  2. Yes mam you are 100% right. This ishwarya character worst. And they both wrong examples no one support to that type of characters. Please end up the serial. Boring.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!