தனது மகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா வெளியிட்ட வீடியோ – மகள்கள் தினம் வாழ்த்து!

0
தனது மகளுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவா வெளியிட்ட வீடியோ - மகள்கள் தினம் வாழ்த்து!
தனது மகளுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவா வெளியிட்ட வீடியோ - மகள்கள் தினம் வாழ்த்து!
தனது மகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா வெளியிட்ட வீடியோ – மகள்கள் தினம் வாழ்த்து!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெங்கட். அவர் மகள்கள் தினமான நேற்று தனது மகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் வெங்கட்:

விஜய் டிவியில் டாப் சீரியலில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக நடித்து வருபவர் நடிகர் வெங்கட். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார். பின்னர் குந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர் 8’ டைட்டில் வின்னராக 10 லட்சத்தை தட்டிச் சென்ற ஸ்ரீதர் சேனா – டாப் 3 யார்?

அது மட்டும் இல்லாமல் சன் டிவியில் ரோஜா சீரியலில் நடித்து வந்தார். சமீபத்தில் அவர் அதிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்நிலையில் அவருக்கு தேஜா என்ற மகள் இருக்கிறார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் பல புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் பல ரசிகர்கள் அவரை பாலோ செய்து வருகின்றனர்.

சமந்தா, நாகசைதன்யா விவாகரத்து குறித்த வதந்திகள் – நீதிமன்றத்தை நாடிய நடிகை!

இந்நிலையில், நேற்று மகள்கள் தினம், அதனால் பல பிரபலங்கள் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தனர். அந்த வரிசையில் நடிகர் வெங்கட் தனது மகளுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது கைலியில் தொட்டில் போல மகளை உட்கார வைத்துள்ளார். அவர் மகள் அதிலேயே உறங்கி விட்டார். மேலும் ஆனந்த யாழை பாடலுடன் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அருமையான வீடியோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!