தமிழக மாவட்ட நீதிமன்றத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஜூலை 20 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
தமிழக மாவட்ட நீதிமன்றத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ஜூலை 20 விண்ணப்பிக்க இறுதி நாள்!
தமிழக மாவட்ட நீதிமன்றத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ஜூலை 20 விண்ணப்பிக்க இறுதி நாள்!
தமிழக மாவட்ட நீதிமன்றத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஜூலை 20 விண்ணப்பிக்க இறுதி நாள்!

தமிழகத்தின் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Chief Legal Aid Defense Counsel, Deputy Chief Legal Aid Defense Counsel & Assistant Legal Aid Defense Counsel ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (20.07.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Coimbatore District Court வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் Chief Legal Aid Defense Counsel (01), Deputy Chief Legal Aid Defense Counsel (03) மற்றும் Assistant Legal Aid Defense Counsel (04) ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 08 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
  • Chief Legal Aid Defense Counsel பணிக்கு குற்றவியல் சட்டத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்கள், சிறந்த வாய்மொழி மற்றும் எழுத்து திறன் உள்ளவர்கள், குற்றவியல் சட்டம் பற்றிய சிறந்த புரிதல் உள்ளவர்கள், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குறைந்தது 30 குற்றவியல் விசாரணைகளைக் கையாண்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • Deputy Chief Legal Aid Defense Counsel பணிக்கு குற்றவியல் சட்டத்தில் குறைந்தது 7 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்கள், குற்றவியல் சட்டம் பற்றிய சிறந்த புரிதல் உள்ளவர்கள், சட்ட ஆராய்ச்சியில் திறன், பாதுகாப்பு ஆலோசகரின் நெறிமுறைக் கடமைகள் பற்றிய முழுமையான புரிதல் உள்ளவர்கள், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் 20 குற்றவியல் விசாரணைகளைக் கையாண்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Assistant Legal Aid Defense Counsel பணிக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை குற்றவியல் சட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், சிறந்த வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட தொடர்பு திறன் உள்ளவர்கள், பாதுகாப்பு ஆலோசகரின் நெறிமுறைக் கடமைகளைப் பற்றிய முழுமையான புரிதல் உள்ளவர்கள், வேலையில் தேர்ச்சியுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Chief Legal Aid Defense Counsel பணிக்கு ரூ.90,000/- என்றும், Deputy Chief Legal Aid Defense Counsel பணிக்கு ரூ.60,000/- என்றும், Assistant Legal Aid Defense Counsel பணிக்கு ரூ.30,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
Coimbatore District Court விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து “தலைவர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம், கோயம்புத்தூர் – 641018” என்ற முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (20.07.2022) மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 Download Notification & Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here