TNSPC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – மார்ச் 2 முதல் பயிற்சி வகுப்புகள்!

0
TNSPC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2 முதல் பயிற்சி வகுப்புகள்!
TNSPC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2 முதல் பயிற்சி வகுப்புகள்!
TNSPC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – மார்ச் 2 முதல் பயிற்சி வகுப்புகள்!

கடலூர் மாவட்டத்தில் TNPSC குரூப் 2,2A தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பயிற்சி வகுப்பு:

தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு அந்த துறைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 & VAO, 7b, 8 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2022ம் ஆண்டுக்கான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. அதில் நடப்பாண்டு 32 வகையான போட்டித் தேர்வுகளை நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. அதில் அதிக தேர்வர்களால் எழுத கூடிய குரூப்2, 2A ,4 & VAO தேர்வுகள் குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ‘இந்த’ மாவட்டத்தில் மட்டும்!

ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு இந்த குரூப் 2, 2A தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 5831 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப் 2 தேர்வானது மே 21 தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வின் அதிகாரபூர்வ தேதி வெளியாகியுள்ள நிலையில் தேர்வர்கள் தேர்வுக்கு இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

இவர்களுக்கு உதவும் வகையில் கடலூர் மாவட்டத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. மாா்ச் 2- ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நேரடி பயிற்சி வகுப்புகளாக பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளன. அதே போல் SSC தேர்வுக்கான பயிற்சியும் இணையவழியில் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வோர் தங்களது புகைப்படம், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு 04142-290039 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!