சித்ராவின் தற்கொலைக்கு என்ன தான் காரணம்? முதன் முறையாக கூறிய ஹேம்நாத்!

0
சித்ராவின் தற்கொலைக்கு என்ன தான் காரணம்? முதன் முறையாக கூறிய ஹேம்நாத்!
சித்ராவின் தற்கொலைக்கு என்ன தான் காரணம்? முதன் முறையாக கூறிய ஹேம்நாத்!
சித்ராவின் தற்கொலைக்கு என்ன தான் காரணம்? முதன் முறையாக கூறிய ஹேம்நாத்!

சின்னத்திரை பிரபலமான சித்ரா எதற்காக தற்கொலை செய்துகொண்டார், உண்மையாக அவர் தற்கொலை தான் செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என வழக்கு தொடர்ந்து நடந்து வரும் வேளையில் முதன் முறையாக அன்றைக்கு என்ன நடந்தது என்பது குறித்தான தகவலை ஹேம்நாத் பகிர்ந்துள்ளார்.

சித்ராவின் மரணம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் தான் சித்து என்னும் சித்ரா. இவர் யாருமே எதிர்பாராத நேரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் இறப்பு செய்தி திரையுலக வட்டாரம் முழுக்க மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சித்ராவின் கணவரான ஹேம்நாத் சித்ராவை மனதளவில் கொடுமை செய்ததன் காரணமாக தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என பல செய்திகள் வெளியாகின.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ராவின் இறப்பில் இருக்கும் சந்தேகங்கள் – மனம் திறந்த ஹேம்நாத் நண்பர்!

அதாவது அவ்வப்போது ஹேம்நாத் யோக்கியமான பெண்ணாக இருந்தால் உயிரோடு இருக்க மாட்டாய் என கூறி கொண்டே இருப்பாராம். அவ்வப்போது குடிபோதையில் சித்ராவை ஹேம்நாத் அடிப்பார் எனவும் பல செய்திகள் வெளியானது. இதனால் போலீசார் ஹேம்நாத்தை கைது செய்ததை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சில மாதங்களிலேயே ஜாமினில் வெளிவந்தார். சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை பெண் கிடையாது. ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் எனவும், சித்ரா சாகும் அளவுக்கு என்ன தான் பிரச்சனை என்பது குறித்தான அனைத்து தகவலையும் முதன் முறையாக ஹேம்நாத் கூறியுள்ளார். அதாவது, எப்போதும் சித்ரா கலகலப்பாக தான் இருப்பார். ஆனால், அன்று இரவு அவளது முகத்தில் மிகப் பெரிய சோகம் தெரிந்தது. வற்புறுத்தி அவளிடம் எதைப் பற்றியும் கேட்க வேண்டாம். சிறிது நேரம் கழித்து கேட்டுக்கலாம் என விட்டுவிட்டேன். பின்பு குளிப்பதற்காக பாத்ரூமுக்குள் சென்று வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என்னாச்சு என்று கதவை தட்டி பார்க்கையில் மேலே ஒரு கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தார். உண்மையாகவே விளையாடி கொண்டிருக்கிறார் என்று தான் நினைத்தேன். ஆனால், அவர் உயிரோடு இல்லை என்பதை தற்போது வரைக்கும் நம்ப முடியவில்லை என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!