சென்னையில் நாளை (மார்ச் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
சென்னையில் நாளை (மார்ச் 4) மின்தடை ஏற்பட
சென்னையில் நாளை (மார்ச் 4) மின்தடை ஏற்பட

சென்னையில் நாளை (மார்ச் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

மின்தடை:

இந்த நவீன டிஜிட்டல் உலகத்தில் ஒரு நொடி கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் இருக்க முடியாது. ஆனாலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் போது மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்பட இருப்பதாக துணை மின் நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு…!

சென்னை மாநகரில் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

சென்னையில் உள்ள கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளான தொழிற்பேட்டை கிண்டி, ராஜ்பவன் பகுதி, ஆலந்தூர் பகுதி, ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, தில்லை கங்கா நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மூவரசம்பேட்டை, கங்கா நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மூவரசம்பேட்டை ஆகிய பகுதிகளிலும், அதை தொடர்ந்து, கே கே நகர் பகுதியில் உள்ள ரங்கராஜபுரம் டேங்க் தெரு, சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர், சூளைமேடு சாலையின் ஒரு பகுதி கோடம்பாக்கம் கங்கா நகர் வடபழனி வெள்ளாள தெரு ஆகிய இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளிலும், பட்டினம்பாக்கம் பகுதியை பொறுத்த வகையில் சீனிவாசபுரம், டுமீங் குப்பம், சாந்தோம் நெடுஞ்சாலை, மந்தவெளி பாக்கம் மந்தவெளி பகுதி, சாந்தோம் பகுதி கச்சேரி ரோடு, நொச்சிக் குப்பம் ஆகிய இடங்களிலும் நாளை மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!