சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலை!
சென்னையில் செயல்படும் கலாக்ஷேத்ரா நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Deputy Director காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் இப்பணிக்கு என ஒரேயொரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Kalakshetra வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Deputy Director பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் Officers ஆக பணியாற்றியிருக்க வேண்டும்.
- வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
- அவற்றுடன் பணியில் 3 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,200/- வரை தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக வழங்கப்படும்
- விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 22.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.