தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் – சென்னை ஐஐடி முதலிடம்!
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான ஆண்டு தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதல் இடத்தினை இந்த ஆண்டு பிடித்துள்ளது. இந்த தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தரவரிசை பட்டியல்:
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் எந்த கல்வி நிறுவனம் சிறந்ததாக இருக்கிறது என்று ஆண்டுதோறும் NIRF சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியல் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் தரவரிசை பட்டியல் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? செப்.14ல் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆலோசனை!
ஒரு கல்வி நிறுவனத்தின் ஐந்து அம்சங்களான கற்பித்தல் (Teaching) கற்றல் மற்றும் வளங்கள் (Learning and Resources), ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி (Research and Professional Practice), பட்டப்படிப்பு முடிவுகள் (Graduation Outcomes), வெளியீடு மற்றும் உள்ளடக்கம் (Outreach and Inclusivity) மற்றும் கருத்து (Perception) ஆகிய அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.
அந்த வகையில் கடந்த இரு ஆண்டுகளாக சென்னை ஐஐடி நிறுவனம் இந்த பட்டியலில் முதல் இடத்தினை தக்க வைத்து வருகிறது. இந்த ஆண்டும் சென்னை ஐஐடி முதல் இடத்தினை பிடித்து சாதனை செய்துள்ளது. இந்த பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் காணொளி காட்சி வாயிலாக வெளியிட்டுள்ளார். சென்னை ஐஐடி “இன்ஜினியரிங்” மற்றும் “ஓவர் ஆல்” ஆகிய பிரிவுகளில் முதல் இடத்தினை பிடித்து உள்ளது.
மாநிலம் முழுவதும் மத & பொது கூட்டங்களுக்கு தடை – கொரோனா 3ம் அலை எதிரொலி!
IISC பெங்களூரு நிறுவனம் இரண்டாவது இடத்தினையும், ஐஐடி பம்பாய் மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 7 ஐஐடி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது. மருத்துவ கல்வி நிறுவனங்களின் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதல் இடத்தினை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சென்னை மருத்துவ கல்லூரி 12ம் இடத்தினை பிடித்துள்ளது. சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் முதல் இடத்தினை சென்னை லயோலோ கல்லூரி மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளது.