SBI ATM கட்டணம் முதல் சிலிண்டர் விலை வரை – ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
ஜூலை 1 முதல் SBI வங்கியின் ஏடிஎம் சேவை கட்டணம், தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஓட்டுநர் உரிமம், சமையல் சிலிண்டர் விலை என பல்வேறு மாற்றங்கள் ஏற்படவுள்ளன. தற்போது அதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.
ஜூலை 1:
இந்தியாவில் ஜூலை 1 முதல் பல்வேறு துறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதன்படி ஜூலை 1 முதல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு RTO அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை என்றும் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் முறையாக பயிற்சி முடித்தால் போதும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து விவாத் சே விஷ்வாஸ் திட்டத்தின் கீழ் கட்டணம் செல்லுவதற்கான கடைசி தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக தனியார் பள்ளிகளில் RTE இலவச மாணவர் சேர்க்கை துவக்கம்!
அதன்படி ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 31 வரை எந்த வட்டியும் இல்லாமல் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சமையல் எரிவாயுவின் விலை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் திருத்தப்படும். எண்ணெய் நிறுவனங்கள் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்கள் அடிப்படையில் இதன் விலை நிர்ணயம் செய்யப்படும். அதன்படி புதிய விலை வருகிற 1ம் தேதி தெரிவிக்கப்படும். அதேபோல் பொதுத்துறை வங்கியான SBI வங்கி தனது BSBD சேவிங் கணக்கில் பல புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.புதிய மாற்றங்கள் அனைத்தும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, ATM சேவை மற்றும் செக் புக் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. மேலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பூஜ்ஜியம் என்றும் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்தில் தனது அடிப்படை சேமிப்பு கணக்கில் இருந்து 4 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க இயலும் என்றும் அதற்கு மேல் ATM அல்லது வங்கி கிளைகள் மூலம் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காசோலை பரிவர்த்தனையில் ஓர் ஆண்டுக்கு 10 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என்றும் அதற்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.