விடுமுறை நாட்களை மாற்றியமைக்க கோரிக்கை – அரசின் முடிவு என்ன?

0
விடுமுறை நாட்களை மாற்றியமைக்க கோரிக்கை - அரசின் முடிவு என்ன?
விடுமுறை நாட்களை மாற்றியமைக்க கோரிக்கை - அரசின் முடிவு என்ன?
விடுமுறை நாட்களை மாற்றியமைக்க கோரிக்கை – அரசின் முடிவு என்ன?

2024 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியான நிலையில் அதனை அரசு திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை:

பீகார் மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை பட்டியல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு 30 நாட்களுக்கும் அதிகமாக கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2024 ஆம் ஆண்டில் ஹர்தாலிகா தீஜ் மற்றும் ஜிதியா உள்ளிட்ட முக்கிய பண்டிகை தினத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

Whatsapp பயனர்களுக்கு மீண்டும் ஒரு அப்டேட் – முழு விவரம் இதோ!

மாநிலத்தில் கல்வித்துறையில் பெரும்பாலும் பெண் ஊழியர்களே இருக்கும் நிலையில் முக்கிய பண்டிகை தினத்திற்கு விடுமுறை அளிக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக, கோடை விடுமுறை நாட்களில் பள்ளியின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு வேலைநாளாக இருக்கும். இதனால், பெரும்பாலான நாட்கள் ஆசிரியர்கள் வேலை செய்யவேண்டியதாக உள்ளது. இதனால், 2024 ஆம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலை அரசு மாற்றியமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!