நிலவை சுற்றி வரும் சந்திராயன் – 3 – ISRO வெளியிட்ட முக்கிய அப்டேட்!

0
நிலவை சுற்றி வரும் சந்திராயன் - 3 - ISRO வெளியிட்ட முக்கிய அப்டேட்!
நிலவை சுற்றி வரும் சந்திராயன் - 3 - ISRO வெளியிட்ட முக்கிய அப்டேட்!
நிலவை சுற்றி வரும் சந்திராயன் – 3 – ISRO வெளியிட்ட முக்கிய அப்டேட்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் – 3 விண்கலம் இன்று முதல் நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணிக்கவுள்ளது.

சந்திரயான் – 3:

நிலவின் இருண்ட பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் ரூ. 615 கோடி செலவில் சந்திரயான் – 3 விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட சில மணி நேரத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த சந்திரயான் – 3 விண்கலம் தனது முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்து விட்டது.

மண்டல கிராம வங்கிகளுக்கு முக்கிய அறிவிப்பு – நிதியமைச்சர் வெளியீடு!

இது குறித்து தற்போது இஸ்ரோ வெளியிட்ட செய்தி குறிப்பில், நிலவு பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை சந்திரயான் கடந்து விட்டது. கடந்த 1ம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளுவதற்கான உந்து விசை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்படவுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!