மண்டல கிராம வங்கிகளுக்கு முக்கிய அறிவிப்பு – நிதியமைச்சர் வெளியீடு!

0
மண்டல கிராம வங்கிகளுக்கு முக்கிய அறிவிப்பு - நிதியமைச்சர் வெளியீடு!
மண்டல கிராம வங்கிகளுக்கு முக்கிய அறிவிப்பு - நிதியமைச்சர் வெளியீடு!
மண்டல கிராம வங்கிகளுக்கு முக்கிய அறிவிப்பு – நிதியமைச்சர் வெளியீடு!

இந்தியாவில் மத்திய அரசு அமல்படுத்தி இருக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் மண்டல கிராம வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமணம் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 4) தென்மண்டல கிராம வங்கிகளின் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சக செயலாளர், மத்திய ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகள், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த நிதித்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், நபார்டு, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை – இன்றைய விலை நிலவரம் இதோ!

அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மத்திய அரசு அமல்படுத்தி உள்ள பிரதம மந்திரி ஜந்தன் யோஜனா, பிரதம மந்திரி முத்ரா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, பிரதமமந்திரி ஸ்வாநிதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த மண்டல கிராம வங்கிகள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். தேசிய அளவில் ஒப்பிடுகையில், தென்மண்டல கிராம வங்கிகள் கடன் வைப்பு விகிதம், வாராக் கடன் வசூலிப்பது போன்றவற்றை சிறப்பாக செய்கிறது என தெரிவித்தார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!