மத்திய ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவுகள் – அதிரும் வெளிநாட்டு வங்கிகள்!

0
மத்திய ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவுகள் - அதிரும் வெளிநாட்டு வங்கிகள்!
மத்திய ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவுகள் – அதிரும் வெளிநாட்டு வங்கிகள்!

நாட்டில் ரிசர்வ் வங்கி வெளிநாட்டு வங்கிகளுக்கான விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.

புதிய உத்தரவுகள்:

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது பல்வேறு புதிய உத்தரவுகளையும் மாறிவரும் பொருளாதர நிலைக்கு ஏற்ப அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது குறைந்தபட்ச இருப்பு தேவை காரணமாக சர்வதேச வங்கிகள் வசதி படைத்தவர்களின் கணக்குகளை மூடுகின்றது. அறிக்கையின் படி 20-க்கும் மேற்பட்ட தனி நபர்களின் சர்வதேச வங்கிக் கணக்குகள் கடந்த இரண்டு மாதங்களில் மூடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்பிஐ விதிகளின்படி தனிநபர் ஆண்டுக்கு ரூபாய் 250 ஆயிரம் டாலர் வரையிலான பங்குகள், சொத்துக்கள் போன்றவற்றை முதலீடு செய்ய முடியும். பொதுவாக சர்வதேச வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு ஒரு மில்லியன் டாலராக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச இருப்புத் தொகையின் மூலமாக வங்கிகள் லாபம் ஈட்டுவதாலும், அதிக அளவிலான பலன்கள் கிடைப்பதாலும் இத்தகைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளின் படி சர்வதேச வங்கி கணக்கில் இருக்கும் செயலற்ற பணத்தை 180 நாட்களுக்குள் முதலீடு செய்ய வேண்டும் அல்லது திரும்ப கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி சிங்கப்பூர் வங்கி சமீபத்தில் தனது இந்திய வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் பணத்தை முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!