தமிழக இடைநிலை ஆசிரியர்களின் குமுறல் –  கவனத்தில் கொள்ளுமாஅரசு?

0
தமிழக இடைநிலை ஆசிரியர்களின் குமுறல்
தமிழக இடைநிலை ஆசிரியர்களின் குமுறல் –  கவனத்தில் கொள்ளுமாஅரசு?

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பல்வேறு குறைபாடுகள் குறித்த கோரிக்கைகளும், குமுறல்களும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள்:

தமிழகத்தில் டிசம்பர் 21ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மட்டுமே பெற முடியும் என்றும் பட்டதாரி பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் காரணமாக இடைநிலை ஆசிரியர்கள் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இது போல் 2009 ஆம் ஆண்டில் ஆறாவது சம்பள குழுவின் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்கப்பட்டது. அதே நேரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இதன் வாய்ப்பு மறுக்கப்பட்டு 20 ஆயிரம் ஆசிரியர்களும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்காமல் உரிமைகள் மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கமானது அரசுக்கு கோரிக்கைகளை வைத்து வருகிறது. அதில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியது போல் சம வேலைக்கு சம ஊதியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட மூவர் குழு இத்திட்டம் குறித்தான அறிக்கைகளை அளிக்காமல் உள்ளது. மேலும் பதவி உயர்வு போன்ற விஷயங்களும் மறுக்கப்பட்டுள்ளதால் இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!