மத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள்
மத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள்

மத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்ட மாணவர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐஐடி, ஐஐஎம், என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு மேற்கொண்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் மத்திய அரசின் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஐடி வேலைவாய்ப்பு

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருத்தல் அவசியம்.

மத்திய அரசின் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அல்லது அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெறலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!