வேலை இல்லா பட்டதாரிகளே.. உங்களுக்காக மத்திய அரசின் இலவச பயிற்சி.. Certificate உண்டு.. Job Confirm!
மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வண்ணம், சான்றிதழ் உடன் கூடிய இன்சூரன்ஸ் ஆலோசகர் பயிற்சியை வழங்கி வருகிறது. அது பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
இலவச பயிற்சி:
நாட்டில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதை நோக்கமாக கொண்டு தான் அரசு செயல்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகள் நிறைந்து இருந்தால் தான் இளைஞர்கள் நேரான பாதையில் வாழ்வில் பயணிக்க முடியும். வேலையில்லா திண்டாட்டம் நிலவி வந்தால், நாட்டில் பல விதமான பாதிப்புகளும் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக மத்திய அரசு பல சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதற்காக NSDL திட்டத்தின் மூலம் இன்சூரன்ஸ் ஆலோசகராக பணியாற்றுவதற்கான இலவச பயிற்சியினை அரசு வழங்கி வருகிறது. இந்த பயிற்சியினை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி. இதற்கான சான்றிதழையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பயிற்சியினை பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிரடி காட்டும் தங்கம் விலை.. ஒரே நாளில் 5,100-ஐ தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி!
Exams Daily Mobile App Download
வழிமுறைகள்:
- முதலில் https://eskillindia.org/HdfcLife என்ற இணையத்தளத்திற்குள் செல்ல வேண்டும்.
- பின்னர், MAIN PAGE ல் கொடுக்கப்பட்டிற்கும் CLICK HERE என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில், நாடு முழுவதும் இதற்கான பயிற்சி வழங்கும் மையங்களின் இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
- பயிற்சி மையம் நடத்துபவரின் விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அவரிடமும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
- பின்னர், மீண்டும் முதல் பக்கத்திற்கு வர வேண்டும். அதில், உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி, இமெயில் முகவரி, உங்கள் மாவட்டம், மாநிலம், அதிகபட்ச கல்வி தகுதி போன்றவை கேட்கப்பட்டிருக்கும்.
- அதில், உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
- SUBMIT கொடுத்ததும், REGISTERED SUCCESSFULLY என்று திரையில் காண்பிக்கப்படும்.
- இறுதியாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பிற விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.