மத்திய அரசின் JEE & NEET தேர்வு ஒன்றிணைப்பு? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்!

0
மத்திய அரசின் JEE & NEET தேர்வு ஒன்றிணைப்பு? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்!
மத்திய அரசின் JEE & NEET தேர்வு ஒன்றிணைப்பு? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்!
மத்திய அரசின் JEE & NEET தேர்வு ஒன்றிணைப்பு? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்!

இந்தியாவில் நடத்தப்படும் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் கியூட் தேர்வுடன் இணைக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுதப்பட்டு வந்தது. இதற்கு மத்திய கல்வி அமைச்சர் பதிலளித்துள்ளார்.

கியூட் தேர்வு:

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, என்ஐடி, பி.இ உள்ளிட்ட படிப்புகளில் சேர ஜே.இ.இ எனும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்த இந்த நுழைவு தேர்வு 2022- 23 கல்வியாண்டு முதல் 2 முறை நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வு முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முதன்மை தேர்வு ஜூலை மாதம் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து மற்றொரு நுழைவுத் தேர்வான நீட் கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. சுமார் 7,78,725 பேர் எழுதிய இந்த நீட் தேர்வின் முடிவுகள் நேற்று neet.nta.nic.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுக்கான ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை கியூட் தேர்வுடன் இணைப்பது குறித்த தகவல் வெளியானது. அண்மையில் பல்கலைக்கழக மானிய குழு தலைவர் வரும் ஆண்டுகளில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு கியூட் தேர்வுடன் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Jio வாடிக்கையாளர்களுக்கான சூப்பர் திட்டங்கள் – மிக குறைந்த விலையில் அறிமுகம்!

இது குறித்து விளக்கம் அளித்த மத்திய கல்வி அமைச்சர் நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளை கியூட் தோ்வுடன் ஒன்றிணைக்கும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தேர்வுகளை இணைப்பது குறித்த கருத்துரு மற்றும் மட்டுமே உள்ளது. தீர்மானம் நிறைவேற்ற குறைந்தது 2 ஆண்டுகள் ஆகலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மத்திய அரசு டிஜிட்டல் முறையிலான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!