மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டும் 3% உயர்த்தியுள்ளது. இதையடுத்து தற்போது மத்திய ரயில்வே ஊழியர்களின் DA கொடுப்பனவு 14 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.

அகவிலைப்படி உயர்வு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டது. அதனால் கடந்த 2020ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு, அகவிலை நிவாரணத்தொகையை வழங்கப்படவில்லை. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 3% வழங்கப்பட்டு 31% பெற்று வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 1ம் தேதி அன்றும் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட்டு தற்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.

தமிழக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு – அரசு முடிவு!

இதையடுத்து தற்போது மத்திய அரசின் 6வது ஊதியகுழுவின் கீழ் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1960ம் ஆண்டு நவம்பர் 18 மற்றும் 1985ம் ஆண்டு டிசம்பர் 31க்கு இடையில் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற CPF பயனாளிகளுக்கு அகவிலை நிவாரண அளவீட்டை உயர்த்தியுள்ளது. அதாவது 368 சதவீதத்திலிருந்து 381 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் ரயில்வே ஊழியர்களுக்கும் DA கொடுப்பனவு 14 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், இதனை ரயில்வே ஊழியர்களுக்கு 2 பகுதிகளாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதல் அறிவிப்பு கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 1 முதல் 189% லிருந்து 196 சதவீதமாக உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 1 முதல் அகவிலைப்படி 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு அவர்களின் ஊதியமும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here