மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி – ஜூலை முதல் அமல்?

3
மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி - ஜூலை முதல் அமல்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி - ஜூலை முதல் அமல்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி – ஜூலை முதல் அமல்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்படும் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இதனால் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் உயர்வு காணப்படும் என கூறப்படுகிறது.

முடக்கம் நீக்கம்

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அரசுக்கு கிடைக்க கூடிய நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் படி கடந்த 2020ம் ஆண்டின் ஜனவரி மாத அகவிலைப்படி, ஜுலை மாத அகவிலைப்படி, 2021ஆம் ஆண்டின் ஜனவரி மாத அகவிலைப்படி ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் 2021ல் ஜூலை மாதம் அகவிலைப்படியின் படி முன்னால் இருந்த முடக்கம் நீக்கப்படும் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இதனால் 2020 ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வில் 4 சதவீதமும், ஜூலை மாத அகவிலைப்படி உயர்வில் 3 சதவீதமும், 2021ஆம் ஆண்டில் ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வில் 4 சதவீதமும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வை கணக்கில் கொண்டால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மொத்தமாக 28% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.

மகனின் ஊதியத்தில் 25% தாய்க்கு வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

இது தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப்படி போன்ற சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனடிப்படையில் அகவிலைப்படி தொகை அதிகரிக்க மத்திய அரசு ஊழியர்களின் ஊதியமும் அதிகரிக்கும். இந்த அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவிலான தொகை கிடைக்கும் என கருத்துக்கள் நிலவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. புலி வருது கதைதான்… இந்த செய்தி பக்கத்துல 7th pay commission, 28 % DA இந்த கதை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. January 2019 லிருந்து arrears வருமாங்கிறதையும் தெளிவாக சொல்லுங்களேன்…

  2. புலி வருது கதையில் புலி ஒரு நாள் வந்தது ஆனால் எந்த அரசாங்கம் வந்தாலும் நமக்கு போட்ட நமம் போட்டது potttathuthan….. don’t expect

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!