CBSE 12 ஆம் வகுப்பு உள் மதிப்பீடுகள் பதிவேற்றம் – ஜூன் 28 வரை அவகாசம் நீட்டிப்பு!

1
CBSE 12 ஆம் வகுப்பு உள் மதிப்பீடுகள் பதிவேற்றம் - ஜூன் 28 வரை அவகாசம் நீட்டிப்பு!
CBSE 12 ஆம் வகுப்பு உள் மதிப்பீடுகள் பதிவேற்றம் - ஜூன் 28 வரை அவகாசம் நீட்டிப்பு!
CBSE 12 ஆம் வகுப்பு உள் மதிப்பீடுகள் பதிவேற்றம் – ஜூன் 28 வரை அவகாசம் நீட்டிப்பு!

CBSE மாணவர்களின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிற்பாடு மதிப்பெண்களை வழங்குவதற்கு மாணவர்களின் உள் மதிப்பீட்டு (செய்முறை) மதிப்பெண்களை பதிவேற்ற கடைசி தேதி ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உள் மதிப்பீட்டு மதிப்பெண்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்த பிறகு மாணவர்களின் உள் மதிப்பீட்டு தேர்வின் மதிப்பெண்களை ஜூன் 28 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. இதற்கான கடைசி தேதி இன்று (ஜூன் 7) என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் மாணவர்களின் உள் மதிப்பீடுகளை ஆன்லைன் முறையில் நடத்த, பள்ளிகளுக்கு CBSE வாரியம் உத்தரவிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

கொரோனா தொற்று காரணமாக பல பள்ளிகளில் மாணவர்களுக்கு உள் மதிப்பீடுகளை நடத்தவில்லை என்பதால் மதிப்பெண்களை பதிவேற்றுவதற்கான கடைசி தேதியின் நீட்டிப்பு ஜூன் 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் 28 க்கு முன்னர் மாணவர்களின் அனைத்து உள் மதிப்பீடுகளையும் முடித்து, மதிப்பெண்களை சரியாக பதிவேற்ற வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இ-பதிவு இணையம் இன்று மாலை வரை செயல்படாது – அமைச்சர் தகவல்!

அந்த வகையில் தேர்வு வாரியம் அறிவித்துள்ளபடி, ஒவ்வொரு மாணவர்களின் தனித்தனி புகைப்படங்களும் அவர்களது வைவா வகுப்புகளின் போது மதிப்பீடு செய்த தேர்வாளர் ஆகியோரின் புகைப்படங்களும் மதிப்பீட்டின் போது இடம்பெற வேண்டும். சில பள்ளிகளில் வெளிப்புற தேர்வாளர் நியமிக்கப்படாத பட்சத்தில், பாட சம்பந்தப்பட்ட ஆசிரியர் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி உள் மதிப்பீட்டை நடத்த வேண்டும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ரீல்ஸ் வீடியோ – நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போல!

மதிப்பீடு முடிந்த உடன் CBSE தேர்வு வாரியம் அறிவித்துள்ள LINK மூலம் அந்த மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மதிப்பெண்களை ஒருமுறை பதிவேற்றிய பிறகு வேறு எந்த மாற்றமும் செய்ய முடியாததால் அப்பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த கணக்கீடுகளின் படி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!