CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – இன்று வெளியீடு!!

0
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - இன்று வெளியீடு!!
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - இன்று வெளியீடு!!
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – இன்று வெளியீடு!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்தேர்வு அறிவிப்பு:

கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக ஏற்கனவே நடத்த திட்டமிடப்பட்டிருந்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே போல் கொரோனா அச்சம் காரணமாக ஒரு சில தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக முறைப்படுத்தப்பட்ட வகையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதேபோல், நடப்பு ஆண்டிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பு கருதி தேர்வுகளை ரத்து செய்ய கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

ஜூன் 2 முதல் கடைகளை திறக்க அனுமதி – முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு!

ஆனால் கடந்த வாரம் நடத்தப்பட்ட அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், மாணவர்களின் எதிர்காலம் 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் மற்றும் நுழைவு தேர்வுகளின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் நலனிற்காக கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறினார். பல மாநிலங்களும் 12ம் வகுப்பு இறுதி தேர்வுகளை அந்தந்த பள்ளிகளிலேயே 90 நிமிட கால அளவில் நடத்துவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வில் குறு வினாக்கள் மற்றும் MCQ வகை வினாக்கள் மட்டுமே இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று காலமாக தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி நிலைமையை பரிசீலித்து முடிவு செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இதனால் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 31ம் தேதியான நேற்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஜூன் 3ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!