CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு? வாரியம் விளக்கம்!

0
CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு? வாரியம் விளக்கம்!
CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு? வாரியம் விளக்கம்!
CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு? வாரியம் விளக்கம்!

10ம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும், இந்த வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE தேர்வு முடிவுகள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 2, 2021 அன்று வெளியிடாது என்று வாரிய அதிகாரி உறுதிப்படுத்தினார். 10ம் வகுப்பு முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும். ஆனால் இன்று இல்லை. 10 ஆம் வகுப்பிற்கு தங்களை பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் மற்றும் cbseresults.nic.inயில் அறிவிக்கப்பட்ட பிறகு தங்கள் முடிவுகளை சரி பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ICICI வங்கியில் ஆன்லைன் மூலம் ரூ.1 கோடி வரை கல்விக் கடன் – புதிய அறிவிப்பு!

CBSE வாரியம் கடந்த ஜூலை 12ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்தது. 12 ஆம் வகுப்பு முடிவு அறிவிக்கப்பட்ட உடனேயே, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பதை அறிய முற்பட்டனர். சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் அவர்கள் ஜூலை 30 முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை முடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் அதை வழங்க முயற்சிப்பதாகவும் கூறினார்.

TN Job “FB  Group” Join Now

சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் தேர்வு வாரியம் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை நடத்தும் திட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு மே மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததால் ரத்து செய்யப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் தங்கள் முடிவுகளை இணையதளங்கள் முதல் மொபைல் பயன்பாடுகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் வாயிலாக பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!