ICICI வங்கியில் ஆன்லைன் மூலம் ரூ.1 கோடி வரை கல்விக் கடன் – புதிய அறிவிப்பு!

0
ICICI வங்கியில் ஆன்லைன் மூலம் ரூ.1 கோடி வரை கல்விக் கடன் - புதிய அறிவிப்பு!
ICICI வங்கியில் ஆன்லைன் மூலம் ரூ.1 கோடி வரை கல்விக் கடன் - புதிய அறிவிப்பு!
ICICI வங்கியில் ஆன்லைன் மூலம் ரூ.1 கோடி வரை கல்விக் கடன் – புதிய அறிவிப்பு!

உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பை ICICI வங்கி வழங்குகிறது. அதாவது மாணவர்களின் கல்விக்காக ரூ.1 கோடி தொகையிலான கல்விக்கடனை டிஜிட்டல் மூலமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

கல்விக் கடன் திட்டம்

இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ICICI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ஒரு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பலரது கல்விக் கனவை நிறைவேற்றும் விதமாக ரூ.1 கோடி வரையிலான கல்வி கடன் திட்டத்தை இவ்வங்கி டிஜிட்டல் முறையில் அளிக்கிறது. இந்த தொகைகளை பெற்றுக்கொள்ள நாம் வங்கிகளுக்கு சென்று இனி அலையத்தேவையில்லை.

Reliance Jio வின் அதிரடி ஆஃபர் – ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’!

இது தொடர்பான அறிவிப்பை ICICI வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதாவது, ‘மாணவர்களின் உயர் கல்வி குறித்ததான கனவுகளை நிறைவேற்ற ICICI வங்கி இன்ஸ்டன்ட் எஜூகேஷன் லோனை ரூ.1 கோடி வரை வழங்குகிறது. இந்த சேவைகள் தற்போது ஆன்லைன் வழியாகவே நிறைவேற்றப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் ICICI வங்கி அளிக்கும் கல்விக் கடனை பெற்றுக்கொள்ள, வங்கியில் முன் ஒப்புதல் அளித்து பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் உயர் படிப்புகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

இக்கடன்கள் பிணையமின்றி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு வங்கியில் முன் ஒப்புதல் பெற்றவுடன், உடனடி அனுமதி கடிதத்தை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும். இவற்றில் ரூ.50 லட்சம் வரை பிணையம் இல்லா கடன் தொகை வழங்கப்படுகிறது. இக்கடனுக்கான வரிச் சலுகையை பொருத்தளவு, கல்விக்கடன் சட்டத்தின் கீழ் வட்டிக்கு எவ்வித உயர் வரம்பும் இல்லாமல் வரி சலுகை கொடுக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த கடன் தொகையானது உள்நாடுகளில் படிக்க குறைந்தபட்சமாக ரூ.50 லட்சமும் வெளிநாடுகளில் படிக்க ரூ.1 கோடியும் வழங்கப்படுகிறது. கல்விக் கடனுக்கான வட்டியை பொருத்தளவு 9.25%லிருந்து துவங்குகிறது. இந்த வட்டி விகிதமானது அதிகமாக இருந்தாலும், அவை ரெப்போ புள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரெப்போ புள்ளிகள் குறையும் பட்சத்தில் வட்டி விகிதமும் குறைவது குறிப்பிடத்தக்கதாகும். இது தவிர GIC for Canada மற்றும் BLOCK Account for Germany உள்ளிட்ட சலுகைகளையும் ICICI வங்கி வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!