CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – 99.04% பேர் தேர்ச்சி!

0
CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 99.04% பேர் தேர்ச்சி!
CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 99.04% பேர் தேர்ச்சி!
CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – 99.04% பேர் தேர்ச்சி!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 3) வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளில் 99.04% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள்

கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டதான CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 3) மதியம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 99.04% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி மதிப்பீடுகள் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் உள் மதிப்பீடு மற்றும் முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு தடை!

CBSE கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த சுமார் 20,97,128 மாணவர்களில் 20,76,997 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் 16,639 மாணவர்களின் முடிவுகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் வாரியம் அறிவித்துள்ளது. இவற்றில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.24 சதவீதமும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 98.89 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டு 21,13,767 மாணவர்கள் வழக்கமான தேர்வு முறைகளிலும் 36,841 பேர் தனி தேர்வாக எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இவற்றில் தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை நேரடி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தேர்வு முடிவுகளை பெற்றுள்ள மாணவர்கள் மதிப்பெண்கள், சான்றிதழ்கள், இடம்பெயர்வு சான்றிதழ்கள் மற்றும் திறன் சான்றிதழ்கள் போன்ற டிஜிட்டல் ஆவணங்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், இதற்கு ரோல் எண், பள்ளி எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும் என CBSE வாரியம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருப்தியடையாத மாணவர்கள் நேரடி தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!