தமிழகத்தில் இன்று முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – பட்ஜெட் தாக்கல் எதிரொலி!
தமிழகத்தில் இன்று (04.08.2021) காலை 11 மணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
அமைச்சரவை கூட்டம்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்றனர். அதன் பிறகு கடந்த மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றார். ஆட்சி மாற்றம் அடைந்த பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்றது. இது தமிழகத்தின் 16 வது சட்டப்பேரவை கூட்டமாகும். ஆளுநர் பன்வாரிலால் பேரவையில் உரையாற்றினார். அதன் பின் சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற பெற்றது.
தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்கள் மூடல் – மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!
அதனை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு முதல்வர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்து தனது உரையை தொடங்கினார். மேலும் அவையின் சபாநாயகர் ஜூன் 24ம் தேதியுடன் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். அதன் பிறகு இன்று (04.08.2021) காலை 11 மணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியாவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். மேலும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.