தமிழகத்தில் ஆன்லைனில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) – ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைனில் நடத்தப்பட்டு வருவது போல தற்போது தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வானது ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து பெறப்படும் சான்றிதழ் ஆனது 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது வாழ்நாள் முழுவதும் செல்லும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தேர்வு எழுதி சான்றிதழ் பெற்ற அனைவரும் அதனை 7 ஆண்டுகளுக்கு மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில் இன்று முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – பட்ஜெட் தாக்கல் எதிரொலி!
இதனை தொடர்ந்து மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ சார்பாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுதும் செல்லும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்கள் தமிழக அரசின் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
TN Job “FB
Group” Join Now
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வுகளை, ஆன்லைனில் நடத்த தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைன் வழியில் நடைபெறவிருக்கிறது. அதனால் தேர்வு மையம் அமைப்பதற்கு தேவையான கல்லூரிகளின் பட்டியலை வழங்குமாறு கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக கடிதம் எழுதப்பட்டு உள்ளது.