தமிழகத்தில் B.sc நர்சிங், B.Pharm படிப்புகளுக்கு ஆகஸ்ட் 25 முதல் தரவரிசை பட்டியல் – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் B.sc நர்சிங், B.Pharm படிப்புகளுக்கு ஆகஸ்ட் 25 முதல் தரவரிசை பட்டியல் - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் B.sc நர்சிங், B.Pharm படிப்புகளுக்கு ஆகஸ்ட் 25 முதல் தரவரிசை பட்டியல் - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் B.sc நர்சிங், B.Pharm படிப்புகளுக்கு ஆகஸ்ட் 25 முதல் தரவரிசை பட்டியல் – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் பி.எஸ்.சி நர்சிங்., பி.பார்ம்.,டிப்ளமோ நர்சிங் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியல்:

தமிழகத்தில் பி.எஸ்.சி நர்சிங்., பி.பார்ம்., போன்ற பட்ட படிப்புகள், டிப்ளமோ நர்சிங் மற்றும் இதர சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வந்தனர். தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், அரசு கல்லூரிகளில் பி.எஸ்.சி நர்சிங்., பி.பார்ம் போன்ற பட்ட படிப்புகளுக்கு 2536 இடங்களும், டிப்ளமோ நர்சிங் போன்ற படிப்புகளுக்கு 2060 இடங்களும் உள்ளன.

இதனை தவிர்த்து மற்ற டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு 8596 இடங்களும் காலியாக உள்ளன. இது மட்டுமல்லாமல் தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் பி.எஸ்.சி நர்சிங்., பி.பார்ம்., டிப்ளமோ நர்சிங் போன்ற படிப்புகளுக்கு காலியிடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இது வரைக்கும் மொத்தமாக 97,839 பேர் பி.எஸ்.சி நர்சிங்., பி.பார்ம் போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – EPF/EPS நியமன தாக்கல் செய்வதற்கான எளிய வழிமுறைகள்!

இவர்களில் 52,036 பேர் கல்லூரி கட்டணம் செலுத்திவிட்டனர். மேலும், 38,471 பேருக்கு கட்டண சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்ட படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளை முதல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதற்கு பின்னர் ரேங்க் பட்டியலின் அடிப்படையில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறும் எனவும், ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் ஒரு வாரம் வரை ஆன்லைன் மூலமாக கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் மருத்துவ கல்வி இயக்கக அதிகாரி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here