பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 102 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Graduate Apprentice பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான அறிவிப்பில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) காலியாக உள்ள Graduate Apprentice பணிக்கு என 102 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.09.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 27 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Graduate Apprentice பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு Engineering Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- BPCL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.25,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
- Interview மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்