கோபியை ஆக்ரோசமாக வெறுக்கும் இனியா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

0
கோபியை ஆக்ரோசமாக வெறுக்கும் இனியா - புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி! (2)
கோபியை ஆக்ரோசமாக வெறுக்கும் இனியா - புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி! (2)

கோபியை ஆக்ரோசமாக வெறுக்கும் இனியா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

ராதிகாவிற்கு கோபிக்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை அனைவருக்கும் தெரிய வந்து விடுகிறது. இந்நிலையில் கோபியின் மீது உயிரையே வைத்திருந்த இனியா மொத்தமாகவே கோபியை வெறுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி ப்ரோமோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதற்குப் பிறகு கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா அல்லது ராதிகாவை விட்டு விலகப் போகிறாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் எழில் மற்றும் ராமமூர்த்தி தாத்தாவை தவிர வேறு யாருக்குமே கோபியை பற்றிய உண்மைகள் தெரியாது. பாக்கியாவும் கோபியின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார். செல்வி கோபியை பற்றி தவறாக கூறும் போதெல்லாம் கண்டிப்பாக அது மாதிரி கிடையாது. கோபி எந்த பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டார் என செல்வியிடம் சண்டை போடுவார்.

ஆனால், தற்போது ராதிகாவின் கையை பிடித்துக்கொண்டு நீ இல்லாமல் என்னால் உயிரோடு இருக்கவே முடியாது எனக் கூறிக் கொண்டிருந்ததை பாக்கியா கேட்ட பிறகுதான் பாக்கியாவிற்கு அனைத்து உண்மைகளும் புரிய வருகிறது. இது மட்டுமல்லாமல் கோபிக்கும் ராதிகாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்கிற விஷயம் ஈஸ்வரி மற்றும் இனியாவிற்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருவரும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கோபியை இனியா சென்று சந்திக்கிறார். அதாவது ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கு அம்மாவை பிடிக்காது என்று எனக்கு நல்லாவே தெரியும்.

ராதிகாவை கண்டபடி திட்டி கோபியை விட்டு விலக சொல்லும் எழில் – ப்ரோமோ ரிலீஸ்!

ஆனால், நீங்கள் இந்த அளவுக்கு செய்வீர்கள் என்று யாரும் நினைக்க கூட இல்லை என கூறுகிறார். மேலும், இதற்குப் பிறகுதான் இனியாவிற்கு ஒரு விஷயம் புரிய வருகிறது. அதாவது, ஒரு முறை இனியாவிடம் கோபி உங்களது அம்மாவும் நானும் பிரிந்து விட்டால் நீ யாருடன் இருப்பாய் என கேட்பார். அதற்கு இனியா நான் கண்டிப்பாக உங்களுடன்தான் டாடி வருவேன் என கூறியிருப்பார். அது ஞாபகம் வந்ததும் கோபியிடம் நான் கண்டிப்பாக உங்களுடன் வரவே மாட்டேன். நான் அம்மாவுடன் நான் இருப்பேன் எனக்கு உங்களை சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை என கூறி கதறி அழும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here