ராதிகாவுடன் கோபியை பார்த்த எழில், பாக்கியாவிடம் சிக்குவாரா? சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

0
ராதிகாவுடன் கோபியை பார்த்த எழில், பாக்கியாவிடம் சிக்குவாரா? சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
ராதிகாவுடன் கோபியை பார்த்த எழில், பாக்கியாவிடம் சிக்குவாரா? சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
ராதிகாவுடன் கோபியை பார்த்த எழில், பாக்கியாவிடம் சிக்குவாரா? சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

சின்னதிரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்தவையாக இருந்து வருகின்றன. இந்த வகையில் உள்ள பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடி திருப்பமாக ராதிகாவுடன் கோபி காரில் செல்வதை எழில் பார்த்து விடுகிறார். இதுக் குறித்த அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த வார எபிசோடுக்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த அதிரடி திருப்பம்:

விஜய் டிவி-யில் பல ஹிட் சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. பிற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்கள் விஜய் டிவி-யில் அதிகம் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. இந்த சீரியலில் நாளுக்கு நாள் அதிரடியான திருப்பங்கள் கொண்ட எபிசோடுகள் ஒளிபரப்பபட்டு வருகிறது. கோபி – ராதிகா காதல் கதையில் தற்போது சீரியல் மின்னல் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் தனம் – அறிமுகமாகும் சுசித்ரா! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

கோபியின் கள்ளக்காதலுக்கு முடிவே இல்லையா? என்று சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். கோபி ஒரு பெண்ணுடன் பழகி வருவது இதுவரை, கோபியின் அப்பா ராமமூர்த்தி, செல்வி அக்கா மற்றும் எழில் ஆகிய மூவருக்கும் தெரியும். இருப்பினும் கோபியின் அப்பாவுக்கு மட்டும் தான் அந்த பெண் ராதிகா என்பதும், கோபி அவருடன் நெருக்கமாக பழகி வருவதும் தெரியும். செல்வி மற்றும் எழிலுக்கு அந்த பெண் யார் என்று தெரியாது. நேற்றைய எபிசோடில், செழியன் பாக்கியா அடித்த சோகத்தில் இருக்க ஜெனியும் எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் கோபி வர உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என சொல்கிறார். அப்போது கோபி பாக்கியா உன்னை அடித்தது தவறு தான் ஆனால் நீ பேசியதும் தவறு தான் அதனால் தான் அப்படி செய்கிறாள் என சொல்கிறார்.

மறுபக்கம் இனியா பாக்கியா எழில் செல்வி பேசிக் கொண்டிருக்க, பாக்கியா அவன் பேசியது எவ்வளவு தப்பு என சொல்கிறார். அப்போது இனியா நாம எல்லாரும் பிக்னிக் போலாமா என்று எழலிடம் கேட்கிறார். அந்நிலையில் குடும்பமாக பிக்னிக் செல்ல பிளான் பண்ணி விட்டார்கள். இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ராதிகாவுடன் கோபி பிக்னிக் சென்று இருக்கும் அதே இடத்திற்கு தான் எழில் மொத்த குடும்பத்தையும் அழைத்து வருகிறார். அப்போது தான் இனியா மூலம் கோபிக்கு 2 குடும்பமும் ஒரே இடத்திற்கு பிக்னிக் வந்திருப்பது தெரிய வருகிறது. உடனே கோபி, வழக்கம் போல் பொய்களை கூறி அங்கிருந்து வேக வேகமாக ராதிகாவை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். அந்த நேரம் பார்த்து தான் கோபி வசமாக எழிலிடம் மாட்டிக் கொண்டார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!