பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் தனம் – அறிமுகமாகும் சுசித்ரா! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் தனம் - அறிமுகமாகும் சுசித்ரா! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் தனம் - அறிமுகமாகும் சுசித்ரா! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் தனம் – அறிமுகமாகும் சுசித்ரா! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூத்த அண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சுஜிதா சீரியலை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் சுசித்ரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டு குடும்பத்தில் நடைபெறும் சண்டை சச்சரவு மற்றும் பாச போராட்டங்களை இந்த தொடர் அப்படியே மக்களுக்கு படம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த குடும்பத்தில் மூத்த அண்ணியாக தனம் வலம் வந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரையும் சிறு வயதில் இருந்தே அம்மா இடத்தில் வைத்து வளர்த்தவர் தனம் தான். மூர்த்தியின் தம்பிகளான ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் என அனைவரும் தனத்தை அம்மாவின் இடத்தில் வைத்து தான் பார்த்து வருகின்றனர்.

“பாக்கியலட்சுமி” சீரியல் ராதிகா ரேஷ்மா வெளியிட்ட பதிவு – கோபியை பற்றி பேசிய ரசிகர்கள்!

ஏதேனும் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்தால் கூட யாருக்கும் மனக் கசப்பு ஏற்படா வண்ணம் பொறுமையாக இருந்து அந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை கவனிப்பார். முழுக்க முழுக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்காக தான் உழைத்து கொண்டிருக்கிறார். தற்போது கூட முல்லைக்கு குழந்தை பிறக்காது என்பதை அறிந்து கொண்டு முல்லைக்கு ஆதரவாக நின்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தனத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுஜிதா சீரியலை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாகவே சுஜிதாவிற்கு மக்களின் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சமயத்தில் சுஜிதா சீரியலை விட்டு விலகியது ரசிகர்கர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், தனம் கதாபாத்திரத்தில் நடிக்க பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் சுசித்ரா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசித்ரா தனம் கதாபாத்திரத்திற்கு பொருந்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!