ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை தான் என அறியும் பாரதி – சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்!

0
ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை தான் என அறியும் பாரதி
ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை தான் என அறியும் பாரதி
ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை தான் என அறியும் பாரதி – சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்!

இந்தவார பாரதி கண்ணம்மா எபிசோடுகள் எதிர்பாராத பல திருப்பங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை தான் என்ற உண்ணமை வெளிவர உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசபட்டு வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் :

விஜய் டிவி தொடர்களில் தொடர்ந்து அதிக நாட்கள் டிஆர்பி யில் முதலில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான். இந்த சீரியல் பல்வேறு நெகட்டிவ் கமெண்டுகளை பெற்று வந்தாலும் நாளுக்கு நாள் இந்த சீரியல் பார்ப்பவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பம் முதலே பாரதி கண்ணம்மா காதல் வாழ்க்கையை காண ரசிகர்கள் சீரியல் பார்த்து வந்தனர். தற்போது இவர்கள் இருவரும் பிரிந்த காரணத்தால் எப்போது சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இந்த சீரியலை தொடர்ந்து ஏகப்பட்ட இல்லத்தரசிகள் பார்த்து வருகின்றனர்.

தனது காதலை சரஸ்வதியிடம் சொல்லும் தமிழ், அதை ஏற்க மறுக்கும் சரஸ்வதி – இந்த வார ப்ரோமோ!

வெண்பா செய்த சூழ்ச்சியின் காரணமாக எட்டு வருடங்களுக்கு மேலாக பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்கின்றனர். அவர்கள் குடும்பத்தினர் அவர்களை சேர்க்க பல்வேறு முயற்சியை செய்கின்றனர். ஆனால் இதுவரை அ வர்கள் சேர்ந்த பாடில்லை. கண்ணம்மா தவறான உணர்வு கொண்டு குழந்தை பெற்றதாக பாரதி நினைக்கிறார். இந்த நினைப்பது தவறு என டிஎன்ஏ டெஸ்ட் மூலம் தெரிந்து கொள்ளலாம் என கண்ணம்மா சொல்லியும், அதை பாரதி மதிக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்ற உண்ணமையை சொல்கிறார். தனது இன்னொரு குழந்தை யார் என்ற உண்மை அறிய சௌந்தர்யா என துளசி வனம் அனைவரிடமும் விசாரணை செய்கிறார். ஆனால் இந்த உண்மை அறிந்த அவர்கள் யாரும் இதை பற்றி கூறாமல் மறைத்து விடுகின்றனர்.

சந்தியாவின் கனவுக்காக அவரை பிரியும் சரவணன் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ

மேலும் அவருக்கு வெண்பாவும் பாரதியும் திருமணம் செய்யவில்லை என்று அஞ்சலி வளைகாப்பு நிகழ்ச்சியில் தெரியவருகிறது. அதன்பின் அவருக்கும் அடுக்கடுக்கான சந்தேகமே எழுகிறது. ஹேமா யாருடைய குழந்தை என்றது ஹேமா தனது இரண்டாவது குழந்தை தான் என கண்ணம்மா சந்தேகப்படுகிறார்.

இந்த நிலையில் இனி வரும் காட்சிகளில் ஹேமா தான் கண்ணம்மாவின் மற்றொரு குழந்தை என்ற உண்மை கண்ணம்மா மற்றும் பாரதிக்கு தெரியவருகிறது. இதை அறிந்த பாரதி மீண்டும் தனது குடும்பம் தன்னை ஏமாற்றுவதாக எண்ணி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். இப்படி நாளுக்கு நாள் பல ட்விஸ்ட்கள் இருப்பதால் இனிவரும் காலங்களில் பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பிகளில் முதலிடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!