
பீகாரில் ரயில் தண்டவாளங்கள் திருட்டு – இப்படியும் நடக்குமா? திகைப்பில் போலீசார்!!
பீகாரில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருட்டு சம்பவம்
பீகார் மாநிலத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டிருந்த ரயில்வே தண்டவாளங்களை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, பீகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்தில் சர்க்கரை ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த ஆலைக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக பாண்டூல் ரயில் நிலையம் முதல் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டதும் அந்த பகுதிக்கு ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
சுமார் 600 ப்ரெஷர்கள் பணிநீக்கம் – பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இந்த நிலையில், பயன்பாட்டில் இல்லாத அந்த ரயில் தண்டவாளங்களை சிலர் திருடி சென்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்களை தேடும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால், சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், பீகாரில் தண்டவாளங்கள் திருடப்பட்ட சம்பவம் ‘இப்படியும் திருடுவார்களா’ என்று மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.