சூடு பிடிக்கும் பொம்மை டாஸ்க்.. சண்டையை தொடங்கிய அசிம் தனலட்சுமி – வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

0
சூடு பிடிக்கும் பொம்மை டாஸ்க்.. சண்டையை தொடங்கிய அசிம் தனலட்சுமி - வெளியான
சூடு பிடிக்கும் பொம்மை டாஸ்க்.. சண்டையை தொடங்கிய அசிம் தனலட்சுமி – வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் இரண்டாவது வாரமே சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோடில் தனம், அசிம் இடையே பயங்கரமான சண்டை வந்துள்ளது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6 ப்ரோமோ

சண்டைக்கும், சமாதானத்திற்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கப்பட்டு 2 வாரங்கள் மட்டுமே ஆகி இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார தலைவராக குயின்சி இருக்கிறார். நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரமே பயங்கர சண்டையாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் அப்படி எதுவும் முதல் 2 வாரங்களில் நடந்தது இல்லை. மேலும் மற்ற சீசன்களில் சண்டைக்கு காரணமாக இருக்கும் பொம்மை டாஸ்க் தற்போது நடந்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அதில் போட்டியாளர்கள் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய எபிசோடில் கூட தனலட்சுமி அசிம் இடையேயும், மகேஸ்வரி தனலட்சுமி இடையேயும் சண்டை வந்தது. அது மட்டுமில்லாமல் தற்போது வரை தனித்து விளையாடிய போட்டியாளர்கள், இப்போது குரூப்பாக சேர்ந்து விளையாட தொடங்கி இருக்கின்றனர்.

விஜய் டிவி “செல்லம்மா” சீரியலில் இருந்து ஹீரோ அர்னவ் விலகல்? வெளியான விளக்கம்!

Exams Daily Mobile App Download

அதனால் சண்டை பயங்கரமாக வந்து கொண்டிருக்கிறது. தற்போது வெளியான ப்ரோமோவில் பஸர் அடிக்கப்பட்டு போட்டியாளர்கள் பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடுகின்றனர். அதை மற்ற போட்டியாளர்கள் சிலர் தடுக்கின்றனர். அப்போது தனலட்சுமி ஷெரினா மற்றும் நிவாவை தள்ளி விடுகிறார். அதனால் கோவப்பட்ட அசிம் அவர்களை இப்படி தள்ளிவிடுகிறாய், நீயும் பெண் தானே என கேட்டு சத்தம் போட, தனலட்சுமி நான் அவர்களை தள்ளிவிடவில்லை, நம்பவில்லை என்றால் கேமெராவை பாருங்கள் என சொல்கிறார். இருப்பினும் அசிம் தனலட்சுமியை திட்டுகிறார். இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!