இலவச ரேஷன் திட்டம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு – மகிழ்ச்சியில் கார்டுதாரர்கள்!!

0
இலவச ரேஷன் திட்டம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு - மகிழ்ச்சியில் கார்டுதாரர்கள்!!
இலவச ரேஷன் திட்டம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு - மகிழ்ச்சியில் கார்டுதாரர்கள்!!
இலவச ரேஷன் திட்டம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு – மகிழ்ச்சியில் கார்டுதாரர்கள்!!

உத்தரபிரதேசத்தில் தகுதி இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் கார்டுகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ரேஷன் வாங்கவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. தற்போது இது தொடர்பான முழு விவரத்தை பார்ப்போம்.

ரேஷன் கார்டு

நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் மலிவான விலைக்கு ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்க பலவகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநில வாரியாக புகார்களை தெரிவிப்பதற்கு புகார் எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு 18004255901 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரேஷன் தொடர்பான முறைகேடுகளை தெரிவிக்கலாம்.

தங்கம் விலையில் மாற்றம்.. திடீர் சரிவு – இன்றைய நிலவரத்தால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Follow our Instagram for more Latest Updates

அத்துடன் பேரிடர் காலத்தில் இலவசமாக ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா காலகட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் இலவசமாக 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் கார்டுகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ரேஷன் வாங்கவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த செய்திகள் குறித்து அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், சமூக வலைதளங்களில் பரவும் இந்த செய்தியானது வெறும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் தகுதியற்றவர்கள் ரேஷன் அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க தேவையில்லை. அதன்படி தற்போது தகுதி உள்ளவர்களும் மற்றும் தகுதியற்றவர்களும் என இருவரும் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!