
“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 23 நாட்கள் ஆன நிலையில் சென்ற வார எபிசோடுடன் நடிகர் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகி இருக்கிறார். இந்நிலையில் தற்போது புதிய தொகுப்பாளராக நடிகர் சிம்பு களமிறங்கி இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட்:
பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றி கண்ட ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை பொதுவாக முன்னணி நடிகர்கள் தொகுத்து வழங்குவார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி மூன்று வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதிலும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்கினார்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? ஓமைக்ரானை தொடர்ந்து “பிஏ 2” வைரஸ் அச்சம்!
இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் இருந்து சுவாரஸ்யமான 14 போட்டியாளர்கள் மீண்டும் விளையாடி வருகின்றனர். அவர்களில் 4 பேர் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது 10 பேர் விளையாடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார். இந்நிலையில் சென்ற வாரத்துடன் நடிகர் கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் காலம் முடிவடைந்துள்ளது.
அவருக்கு பதிலாக யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் சிம்பு மாஸ் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அவர் தான் இனிமேல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். STR பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.