Vijay TV Bigg Boss Promo | வீட்டிற்குள் வந்த ஈரமான ரோஜாவே சீசன் 2 & செந்தூர பூவே சீரியல் நட்சத்திரங்கள்!

0
Vijay TV Bigg Boss Promo | வீட்டிற்குள் வந்த ஈரமான ரோஜாவே சீசன் 2 & செந்தூர பூவே சீரியல் நட்சத்திரங்கள்!
Vijay TV Bigg Boss Promo | வீட்டிற்குள் வந்த ஈரமான ரோஜாவே சீசன் 2 & செந்தூர பூவே சீரியல் நட்சத்திரங்கள்!
Vijay TV Bigg Boss Promo | வீட்டிற்குள் வந்த ஈரமான ரோஜாவே சீசன் 2 & செந்தூர பூவே சீரியல் நட்சத்திரங்கள்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் தற்போது எலிமினேட் ஆன போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் நட்சத்திரங்கள் களமிறங்கி இருப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டு தற்போது மக்களின் ஆதரவுடன் 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு வாரந்தோறும் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகள் பெற்ற போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள். தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ள இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, ராஜு, அமீர், பாவ்னி, நிரூப் ஆகியோர் விளையாடி வருகின்றனர். அவர்களில் மக்களின் அதிகமான வாக்குகள் பெற்ற ஒருவர் வெற்றி மகுடத்தை தட்டி செல்வார்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி? ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் இன்னும் 3 நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்று நடைபெற இருக்கும் நிலையில், இறுதியாக இருக்கும் 5 போட்டியாளர்களை ஊக்குவிக்க எலிமினேட் ஆன பழைய போட்டியாளர்கள் வந்துள்ளனர். சுருதி, நாதியா, சிபி, அபிநய், தாமரை என அனைவரையும் பார்த்த மகிழ்ச்சியில் போட்டியாளர்கள் இருக்கின்றனர். இறுதி நாமினேஷனில் வெளியேறிய தாமரை இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததால் ரசிகர்களும் உற்சாகத்தில் இருந்தனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு ஒத்திவைப்பு!

தற்போது கூடுதல் சிறப்பாக செந்தூர பூவே சீரியல் நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பது போல உள்ள ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மேலும் ஈரமான ரோஜாவே சீசன் 2 நட்சத்திரங்களும் அவர்களுடன் களமிறங்கி இருக்கின்றனர். செந்தூரப்பூவே சீசன் 2 நாயகன் ரஞ்சித் மற்றும் நாயகி ஸ்ரீநிதி ஆகியோர் வந்து, ஸ்மார்ட்டா விளையாட வந்து, மனசை ஜெயிச்சிட்டு போகணும் என்று ரஞ்சித் சொல்வதாக ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!