நயன்தாரா படத்தில் ஹீரோ ஆன விஜய் டிவி ‘பிக் பாஸ்’ கவின் – ரசிகர்கள் வாழ்த்து!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் அவர்களின் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த திரைப்படம்:
முன்னணி தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பரபரப்பான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் வேட்டையனாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கவின் கனா காணும் காலங்கள் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சாண்டி, முஜீன், கவின் மற்றும் தர்சனின் நட்பு பெரிதும் போற்றப்பட்டு வந்தது.
‘பாக்கியலட்சுமி’ ராதிகா கர்பத்துடன் வெளியிட்ட டான்ஸ் வீடியோ – ரசிகர்கள் அதிர்ச்சி!
We are the Boys என்னும் அவர்களின் அணிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து லாஸ்லியாவுடன் கவின் கொண்ட காதல் குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து கவினின் வெளிப்படையான பேச்சு அவருக்கு ஏராளமான ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கவின் அவர்களுக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் வந்து குவிந்தது.
விஜய் டிவி ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ அறந்தாங்கி நிஷாவின் புதிய கெட்டப் – ரசிகர்கள் வாழ்த்து!
தற்போது கவின் அவர்கள் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. தற்போது இந்த படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் தி ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாராகும் படத்தில் கவின் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.