‘பாக்கியலட்சுமி’ ராதிகா கர்பத்துடன் வெளியிட்ட டான்ஸ் வீடியோ – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
'பாக்கியலட்சுமி' ராதிகா கர்பத்துடன் வெளியிட்ட டான்ஸ் வீடியோ - ரசிகர்கள் அதிர்ச்சி!
'பாக்கியலட்சுமி' ராதிகா கர்பத்துடன் வெளியிட்ட டான்ஸ் வீடியோ - ரசிகர்கள் அதிர்ச்சி!
‘பாக்கியலட்சுமி’ ராதிகா கர்பத்துடன் வெளியிட்ட டான்ஸ் வீடியோ – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் முதலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜெனிபர் தனது குத்து பாடலான ‘வாடி மச்சினியே’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் சீரியல் என்றால் அது, பாக்கியலட்சுமி தான். இந்த சீரியலில் ஒரு குடும்ப பெண் எது போன்ற பிரச்சனைகளை சந்தித்து தனது ஆசைகளை நிறைவேற்றுகிறார் என்பதனை கதைக்கருவாக வைத்து காட்சிகளை அமைத்து வருகின்றனர். இவ்வாறாக இருக்க, தற்போது இந்த சீரியலில் கதையின் நாயகி பாக்கியா தனது வீட்டிற்கு அருகில் குடியிருப்பவர்களை வைத்து புதிதாக ஒரு சமையல் ஆர்டரை எடுத்து அதனை வெற்றிகரமாக முடித்தும் விடுகிறார்.

விஜய் டிவி ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ அறந்தாங்கி நிஷாவின் புதிய கெட்டப் – ரசிகர்கள் வாழ்த்து!

ஆனால் அவரது கணக்கில் பணம் செலுத்துவது போல செலுத்தி விட்டு அதனை தொழிலதிபர் ராஜ சேகர் அபகரித்து விடுகிறார். இப்படி பல முக்கிய திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் கோபி ஒரு தலையாக காதலித்து வந்த ராதிகா கதாபாத்திரத்தில் நடிகை ஜெனிபர் நடித்து வந்தார். அவர் முதன் முதலாக தமிழில் ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தில் வரும் குத்து பாடலான ‘வாடி மச்சினியே’ என்ற பாடலுக்கு நடமாடியிருப்பார்.

சரஸ்வதியின் திருமணத்தை நிறுத்தும் தமிழ், கைது செய்யும் போலீசார் – ‘தமிழும் சரஸ்வதியும்’ அடுத்த எபிசோட்!

பின்னர், பாக்கியலட்சுமி சீரியலில் தான் நடித்து வந்தார். ஆனால், கர்ப்பமடைந்ததால் சீரியலில் இருந்து விலகி விட்டார். அவ்வப்போது நடிகை ஜெனிபர் ரீல்ஸ் மற்றும் போட்டோஷூட் நடத்தி வந்தார். தற்போது லேட்டஸ்டாக 18 ஆண்டுகளுக்கு முன்பாக தான் கலக்கலாக நடனமாடிய ‘வாடி மச்சினியே’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்துள்ளார். இந்த ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. லைக்குகளை குவிந்து வருகின்றது. ஆனால் கர்ப்பகாலத்தில் இதுபோன்று ஆடுவது சில ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!